Vista வேண்டாம் என்கிறது Acer நிறுவனம் ஜூலை 26, 2007
Posted by pctimes in இணையம், செய்தி, வன்பொருள்.5 comments
தாய்வானைத் தலைமையாகக் கொண்ட Acer கணினி உற்பத்தி நிறுவனமானது, Windows Vista ஆனது, “மொத்த தொழிற்துறையையே” அதிருப்தியடைய வைத்துள்ளதாக தெரிவித்து, தமது பாவனையிலிருந்து Windows Vista ஐ விலக்கிவிட்டிருக்கிறது.
ஒரு புதிய பணிசெயல் முறைமையானது, கணினி விற்பனையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது இதுவே முதல் தடவையாகும். ஆனாலும், இந்த நிலைமை இந்த வருடத்தின் இறுதி அரையாண்டில் வீழ்ச்சியடையுமென தாம் பலமாக நம்புவதாக உலகின் நான்காவது மிகப் பெரிய கணினி உற்பத்தி நிறுவனமான Acer இன் தலைவர் Gianfranco Lanci தெரிவிக்கிறார்.
கடந்த திங்கள் Financial Times Deutschland எனும் இணையத் தளசெய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
“Vista ஐ நிறுவுவதற்காக வேண்டி, யாராவது புதிய கணினிகளை வாங்கியிருப்பார்கள் என நான் நம்பமாட்டேன்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
“நிலைப்பு தொடர்பில் நிறைய பிரச்சனைகள் உண்டு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பில்லியனைத் தாண்டும் ஜூன் 12, 2007
Posted by pctimes in செய்தி, வன்பொருள்.add a comment
2008 ஆம் ஆண்டளவில் உலகளவில் பாவிக்கப்படும் தனிப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையானது, ஒரு பில்லியனாக அதிகரிக்குமெனவும், இது 2015 ஆம் ஆண்டில் மிக வேகமாக 2 பில்லியனை அடைந்து விடுமெனவும் வர்த்தக ஆய்வறிக்கையொன்று எதிர்வு கூறுகின்றது.
Forrester Research எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து, 2003 தொடக்கம் 2015 வரை உலகளவில் பாவனைக்கு விடப்படும் கணினிகளின் எண்ணிக்கை 12 சதவீதத்தினால் சராசரியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பில்லியன் கணினிகள் என்ற இலக்கை அடைய 27 ஆண்டுகள் சென்றாலும், அடுத்த பில்லியனை அடைய வெறும் ஐந்து ஆண்டுகளே எடுக்குமென இவ்வறிக்கை சுட்டி நிற்கின்றது. உலகளவில் புதுப்பிக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், குறைந்த விலையில் கணினிகள் விற்பனையாதல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வுள்ள மக்களால் ஏற்படுத்தப்படும் கேள்வி என்பனவற்றால், இந்நிலை சாத்தியமாகுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 2015 ஆம் ஆண்டில் மொத்தக் கணினித் தொகையில் 775 மில்லியன்கள் காணப்படுமெனவும் அவ்வாய்வறிக்கை சுட்டி நிற்கிறது.
கணினிகளிற்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.
நிழற்பட உணரிகள் பெரியளவில் உற்பத்தி ஜூன் 6, 2007
Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.1 comment so far
டிஜிடல் கெமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவைகளில் பொருத்தப்படும் நிழற்பட உணரிகளை (image sensors) உற்பத்தி செய்வதற்காக 500 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக Sony நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இந்த முதலீடானது, இவ்வருடம் முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் வரை உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது என Sony நிறுவனம் தெரிவிக்கிறது.
Sony நிறுவனமே நிழற்பட உணரிகளின் உற்பத்தியில் ஜாம்பவானத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
iPhone வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது ஜூன் 4, 2007
Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.add a comment
Apple நிறுவனத்தின் மிகப் புரட்சிகரமான உற்பத்தியாகிய iPhone ஐப் பற்றி நீங்கள் அறிவீர்கள் (தமிழ் PC TIMES, 2007 பெப்ரவரி மாத இதழ்). இந்த iPhone ஆனது இம்மாதம் வெளியிடப்படடுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது என்ன திகதி என அறிவிக்கப்படவில்லை.
பலரும் எதிர்பார்க்கும் இந்த iPhone அமெரிக்காவில் வெளியாகும் தினத்தை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 29 ஆம் திகதி இந்தப் புரட்சிகர iPhone வெளியாகுமென நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளியாகவுள்ள iPhone ஆனது, 499 மற்றும் 599 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியில் அனைவரையும் கவர்ந்த பண்பாக “தொடுகை உணர்ச்சி” இடைமுகம் (touch-sensitive interface) காணப்படுகிறது.
இந்தச் சாதனத்தின் மூலம் இணைய இணைப்பின் விளைவை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்படுகின்றது.
ஐரோப்பியாவிலும், உலகம் பூராகவும் இந்த iPhone வெளியாகும் தினம் இதுவரையில் அறிவிக்கப்படவி்ல்லை.