jump to navigation

இணைய அடிப்படையான தாக்குதல்கள் பற்றிய அவதானம் தேவை ஜூன் 4, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
add a comment

எதிர்காலத்தில் இணைய அடிப்படையான தாக்குதல் மிகப் பெரிய தலையிடியாகக் உலகுக்கு மாறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கக இராஜங்க உப செயலாளர் John Negroponte அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற இணைய அடிப்படையான தாக்குதலைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார். அணமையில் A distributed denial-of-service, or DDoS என்ற இணையத் தாக்குதலே குறித்த நாட்டில் இடம்பெற்றது. இந்த இணைய அடிப்படையான தாக்குதல் தொடர்பான விடயங்களைப் பற்றி நாம் எமது மார்ச் மாத இதழில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

“எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கப் போகும் இணைய அடிப்படையான தாக்குதல்களை எதிர்கொள்ள எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என Negroponte மேலும் தெரிவிக்கிறார்.

நாடுகளிடையான நல்லுறவைக் கூடப் பாதிக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற தாக்குதலும் ரஷ்யா நாட்டின் இணையத்தளங்களை தடுத்து நிறுத்த வழிசெய்தது நீங்கள் அறிந்ததே!

அசைவூட்டங்களுடன் கூகிள் இணையத்தளம் மே 30, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
4 comments

கூகிள் இணையத்தளம் என்பது மிகவும் எளிமையான முறையிலேயே வழமையாக வடிவமைக்கப்படும். ஆனால், கொரியா நாட்டின் கூகிள் தளமானது, அசைவூட்டங்களைக் (Animation) கொண்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகிளின் வழமையான எளிய முறையில் காணப்படும் இணையத்தளத்திற்கு மாற்றமாக அழகிய அசைவூட்டங்கள் கொண்டு கொரியா நாட்டிற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கூகிளின் பல்வேறு வகையான சேவைகளுக்கு இணைப்புகளை கொண்ட வகையிலுள்ள இந்தத்தளத்தில், சேவைகளைக் குறித்து நிற்கும் பெயர்களுக்கு மேலே, பல வர்ணங்களாலான புள்ளிகள் காணப்படுகின்றன.

இப்புள்ளிகளுக்கு மேலே, மவுஸ் பொயின்டரை (Mouse Pointer) கொண்டு செல்கையில் அசைவூட்டங்கள் இயங்க ஆரம்பிக்கும். அண்மையில் பயனர்கள் தமக்கு விரும்பியது போல், கூகிள் பக்கங்களை அமைத்துக் கொள்ள கூகிள், iGoogle எனும் பண்புக்கூறை அதன் முதற்பக்கத்தில் தூண்டலாக்கியதும் (Activate) இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கொரியா நாட்டின் கூகிள் தளத்திற்கு சென்றுதான் பாருங்களேன்.

20MB அளவுள்ள கோப்புகளை இணைப்பிகளாக அனுப்பலாம் மே 25, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
1 comment so far

கூகிள் நிறுவனத்தின் இலவச இணைய அடிப்படையான இலவச மின்னஞ்சல் சேவையான ஜமெயில் சேவையானது, அதன் பயனர்கள் மின்னஞ்சல் மூலம் இணைப்பிகளாக (Attachments) அனுப்பும் கோப்புகளின் அளவை இரட்டிப்பாக்கி உள்ளது.

gmail.gifஏற்கனவே இச்சேவை மூலம் பத்து மெகா பைட்ஸ் அளவான கோப்புகளையே அனுப்ப முடியுமாயிருந்தது. ஆனால், இப்போது Gmail பயன்படுத்துபவர்கள் இருபது மெகா பைட்ஸ் கோப்புகளையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய நிலையை கூகிள் நிறுவனம் சாத்தியமாக்கியுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் மூலம் பல புதிய சேவைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் அதேவேளை, அதன் சேவைகள் புதிய முன்னேற்றங்கள், பண்புக்கூறுகள் என்பனவும் தொடர்ச்சியாக அதன் சேவைகளுக்கு சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இணையத்தை ஆளப்போவதென்னவோ, கூகிள் என்பது மட்டும் உறுதியோ!?