jump to navigation

இப்படியுமா ஆர்வங் கொள்வது? ஓகஸ்ட் 1, 2007

Posted by pctimes in இணையம், சாதனம், செய்தி.
1 comment so far

கடந்த ஜுன் 29ஆம் திகதி வெளியான iPhone ஐ பெற்றுக் கொள்வதில் அமெரிக்க மக்கள் காட்டிய ஆர்வம் வியப்பிற்குரியது. ஆர்வத்தின் காரணமாக மக்கள் வரிசை வரிசையாக குறித்த தினத்திற்கு முன்பிருந்தே iPhone இன் வருகைக்காக தவமாய் தவமிருந்ததை அவதானிக்க முடிந்தது.

iPhone ஐ பெற மக்கள் காட்டிய ஆர்வம் எப்படியானதென கீழேயுள்ள நிழற்படங்களைக் கண்டு புரிந்து கொள்ளலாம். இப்படியுமா ஆர்வங் கொள்வது??

இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா….

iphone.jpg


iphone-6.jpg


iphone-8.jpg


iphone-12.jpg


iphone-13.jpg


iphone-16.jpg


iphone-17.jpg


இத்துணை ஆர்வமா?

YouTube இற்கு LG கையடக்கத் தொலைபேசி தயாரிக்கிறது ஜூலை 3, 2007

Posted by pctimes in சாதனம், செய்தி.
3 comments

உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வுத் தளமான YouTube இற்காக கையடக்கத் தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் ஒப்பந்தமொன்றில் தென் கொரியாவின் நிறுவனமான LG Electronics அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்படும் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியே வீடியோ கோப்புகளை மேலேற்றவும் (Upload), பார்வையிடவும், பகிர்ந்து கொள்ளவும் பயனர்களுக்கு சாத்தியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக LG நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரு கணினி செய்யும் வேலைகளை இக்கையடக்கத் தொலைபேசி செய்யப்போகிறது என்பதுதான் சுருக்கமான தகவலாகும்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் பயனர்கள் YouTube இணையத்தளத்திற்கு வருகை தருவதோடு இதுவரையில் பயனர்களால் சுமார் 70,000 இற்கும் அதிகமான வீடியோ கோப்புகள் இத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனமான LGஆனது, YouTube இன் சொந்தக்காரர்களான Google உடனும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது கவனிப்பட வேண்டிய விடயம்.

Google சேவைகளை நேரடியாக இணைப்பில் ஏற்படுத்தக்கூடிய மூன்றாம் தலைமுறைக்குச் சொந்தமான “Google phone” எனப்படும் கையடக்கத் தொலைபேசியை கடந்த மாதம் ஐரோப்பாவில் LG நிறுவனம் விற்பனைக்கு விட்டது. இந்தக் கையடக்கத் தொலைபேசி மூலம் Google Search, Gmail மற்றும் Google map போன்ற சேவைகளுக்கு இலகுவில் இணைப்பை ஏற்படுத்த முடியுமென சொல்லப்படுகிறது.

1.65 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடந்த வருடம் YouTube இனை Google வாங்கியது நீங்கள் அறிந்ததே!!

நிழற்பட உணரிகள் பெரியளவில் உற்பத்தி ஜூன் 6, 2007

Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.
1 comment so far

டிஜிடல் கெமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவைகளில் பொருத்தப்படும் நிழற்பட உணரிகளை (image sensors) உற்பத்தி செய்வதற்காக 500 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக Sony நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த முதலீடானது, இவ்வருடம் முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் வரை உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது என Sony நிறுவனம் தெரிவிக்கிறது.

Sony நிறுவனமே நிழற்பட உணரிகளின் உற்பத்தியில் ஜாம்பவானத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

iPhone வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது ஜூன் 4, 2007

Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.
add a comment

Apple நிறுவனத்தின் மிகப் புரட்சிகரமான உற்பத்தியாகிய iPhone ஐப் பற்றி நீங்கள் அறிவீர்கள் (தமிழ் PC TIMES, 2007 பெப்ரவரி மாத இதழ்). இந்த iPhone ஆனது இம்மாதம் வெளியிடப்படடுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது என்ன திகதி என அறிவிக்கப்படவில்லை.

iphonejobs.jpgபலரும் எதிர்பார்க்கும் இந்த iPhone அமெரிக்காவில் வெளியாகும் தினத்தை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 29 ஆம் திகதி இந்தப் புரட்சிகர iPhone வெளியாகுமென நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியாகவுள்ள iPhone ஆனது, 499 மற்றும் 599 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியில் அனைவரையும் கவர்ந்த பண்பாக “தொடுகை உணர்ச்சி” இடைமுகம் (touch-sensitive interface) காணப்படுகிறது.

இந்தச் சாதனத்தின் மூலம் இணைய இணைப்பின் விளைவை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்படுகின்றது.

ஐரோப்பியாவிலும், உலகம் பூராகவும் இந்த iPhone வெளியாகும் தினம் இதுவரையில் அறிவிக்கப்படவி்ல்லை.