பென்டகன் தாக்குதலுக்கு சீனா மறுப்பு செப்ரெம்பர் 5, 2007
Posted by pctimes in செய்தி.add a comment
பென்டகன் கணினித் தொகுதிக்கு சீனாவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுவதை தாம் முற்றிலும் மறுப்பதாக சீனாவின் வெளியுறவு அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்றானது, அமெரிக்காவின் பனிப்போர் சம்மந்தமான ஆர்வத்தையே வெளிக்காட்டுவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமது பாதுகாப்பு வலையமைப்பின் கணினிகளை சீனாவின் காவல் துறையினரின் கணினித் தொகுதிப் பிரிவினர் துருவி தாக்குதல் நடத்த முயன்றதாக அமெரிக்கா அண்மையில் செய்திச் சேவையொன்றுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தாக்குதல் காரணமாக பென்டகனின் கணினித் தொகுதிகள் ஒரு கிழமை வரை செயற்படுத்தப்படாமல் கிடந்ததாக அந்தச் செய்திச் சேவையூடாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்ததும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.