jump to navigation

Vista வேண்டாம் என்கிறது Acer நிறுவனம் ஜூலை 26, 2007

Posted by pctimes in இணையம், செய்தி, வன்பொருள்.
5 comments

தாய்வானைத் தலைமையாகக் கொண்ட Acer கணினி உற்பத்தி நிறுவனமானது, Windows Vista ஆனது, “மொத்த தொழிற்துறையையே” அதிருப்தியடைய வைத்துள்ளதாக தெரிவித்து, தமது பாவனையிலிருந்து Windows Vista ஐ விலக்கிவிட்டிருக்கிறது.

ஒரு புதிய பணிசெயல் முறைமையானது, கணினி விற்பனையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது இதுவே முதல் தடவையாகும். ஆனாலும், இந்த நிலைமை இந்த வருடத்தின் இறுதி அரையாண்டில் வீழ்ச்சியடையுமென தாம் பலமாக நம்புவதாக உலகின் நான்காவது மிகப் பெரிய கணினி உற்பத்தி நிறுவனமான Acer இன் தலைவர் Gianfranco Lanci தெரிவிக்கிறார்.

கடந்த திங்கள் Financial Times Deutschland எனும் இணையத் தளசெய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

“Vista ஐ நிறுவுவதற்காக வேண்டி, யாராவது புதிய கணினிகளை வாங்கியிருப்பார்கள் என நான் நம்பமாட்டேன்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

“நிலைப்பு தொடர்பில் நிறைய பிரச்சனைகள் உண்டு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.