ஐந்து சொற்களில் மட்டும் பேச வேண்டும் ஜூன் 12, 2007
Posted by pctimes in இணையம், செய்தி.2 comments
அண்மையில் Webby Awards 2007 நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. ஜுன் 5 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக இம்மாத தமி்ழ் PC TIMES இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். நிகழ்வின் சுவாரஸ்யங்கள் பற்றியும் இதோ எமது வலைப்பதிவின் ஊடாக பகிர்ந்து கொள்கிறோம்.
விருது வழங்கல் விழாவில் விருது பெற்றவர்கள் தாங்கள் விருது பெற்றுக் கொண்டதை தெரிவிக்கும் ஏற்றுக் கொண்ட பேச்சு ஐந்து சொற்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென Webby விருப்பம் தெரிவித்திருந்தது.
இதன்படி, வெற்றியாளர்கள் தங்கள் உரையை ஐந்து சொற்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தனர். மிகவும் சுவாரசியமான சொற்களைக் கொண்ட பேச்சுகள் மேடையில் அரங்கேறின.
வெற்றி பெற்ற Ebay ஆனது, தனது பேச்சில் “ஏல விற்பனை 99 சதத்தில் ஆரம்பமாகும்” (“Bidding starts at 99 cents.”) என குறிப்பிட்டது.
அதேபோல், உலகளவில் பிரசித்தம் வாய்ந்த வீடியோ கோப்பு பகிர்வுத்தளத்தின் சார்பில் விருதைப் பெற்றுக் கொண்ட You Tube இன் ஸ்தாபகர்கள், “You Tube, இரசிகர்களே இது உங்களுக்கானது” (“You Tubers, this is for you.”) என தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.
உலகளவில் 60 மேற்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 8000 இற்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்தே விருது வழங்கலுக்கு பொருத்தமான வெற்றியாளர்களன் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ உங்கள் பார்வைக்காக, Webby Awards 2007 நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை எமது வலைப்பதிவூடாக பகிர்ந்து கொள்கிறோம்.
இரண்டு பில்லியனைத் தாண்டும் ஜூன் 12, 2007
Posted by pctimes in செய்தி, வன்பொருள்.add a comment
2008 ஆம் ஆண்டளவில் உலகளவில் பாவிக்கப்படும் தனிப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையானது, ஒரு பில்லியனாக அதிகரிக்குமெனவும், இது 2015 ஆம் ஆண்டில் மிக வேகமாக 2 பில்லியனை அடைந்து விடுமெனவும் வர்த்தக ஆய்வறிக்கையொன்று எதிர்வு கூறுகின்றது.
Forrester Research எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து, 2003 தொடக்கம் 2015 வரை உலகளவில் பாவனைக்கு விடப்படும் கணினிகளின் எண்ணிக்கை 12 சதவீதத்தினால் சராசரியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பில்லியன் கணினிகள் என்ற இலக்கை அடைய 27 ஆண்டுகள் சென்றாலும், அடுத்த பில்லியனை அடைய வெறும் ஐந்து ஆண்டுகளே எடுக்குமென இவ்வறிக்கை சுட்டி நிற்கின்றது. உலகளவில் புதுப்பிக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், குறைந்த விலையில் கணினிகள் விற்பனையாதல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வுள்ள மக்களால் ஏற்படுத்தப்படும் கேள்வி என்பனவற்றால், இந்நிலை சாத்தியமாகுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 2015 ஆம் ஆண்டில் மொத்தக் கணினித் தொகையில் 775 மில்லியன்கள் காணப்படுமெனவும் அவ்வாய்வறிக்கை சுட்டி நிற்கிறது.
கணினிகளிற்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.