jump to navigation

iPhone வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது ஜூன் 4, 2007

Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.
add a comment

Apple நிறுவனத்தின் மிகப் புரட்சிகரமான உற்பத்தியாகிய iPhone ஐப் பற்றி நீங்கள் அறிவீர்கள் (தமிழ் PC TIMES, 2007 பெப்ரவரி மாத இதழ்). இந்த iPhone ஆனது இம்மாதம் வெளியிடப்படடுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது என்ன திகதி என அறிவிக்கப்படவில்லை.

iphonejobs.jpgபலரும் எதிர்பார்க்கும் இந்த iPhone அமெரிக்காவில் வெளியாகும் தினத்தை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 29 ஆம் திகதி இந்தப் புரட்சிகர iPhone வெளியாகுமென நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியாகவுள்ள iPhone ஆனது, 499 மற்றும் 599 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியில் அனைவரையும் கவர்ந்த பண்பாக “தொடுகை உணர்ச்சி” இடைமுகம் (touch-sensitive interface) காணப்படுகிறது.

இந்தச் சாதனத்தின் மூலம் இணைய இணைப்பின் விளைவை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்படுகின்றது.

ஐரோப்பியாவிலும், உலகம் பூராகவும் இந்த iPhone வெளியாகும் தினம் இதுவரையில் அறிவிக்கப்படவி்ல்லை.

இணைய அடிப்படையான தாக்குதல்கள் பற்றிய அவதானம் தேவை ஜூன் 4, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
add a comment

எதிர்காலத்தில் இணைய அடிப்படையான தாக்குதல் மிகப் பெரிய தலையிடியாகக் உலகுக்கு மாறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கக இராஜங்க உப செயலாளர் John Negroponte அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற இணைய அடிப்படையான தாக்குதலைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார். அணமையில் A distributed denial-of-service, or DDoS என்ற இணையத் தாக்குதலே குறித்த நாட்டில் இடம்பெற்றது. இந்த இணைய அடிப்படையான தாக்குதல் தொடர்பான விடயங்களைப் பற்றி நாம் எமது மார்ச் மாத இதழில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

“எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கப் போகும் இணைய அடிப்படையான தாக்குதல்களை எதிர்கொள்ள எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என Negroponte மேலும் தெரிவிக்கிறார்.

நாடுகளிடையான நல்லுறவைக் கூடப் பாதிக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற தாக்குதலும் ரஷ்யா நாட்டின் இணையத்தளங்களை தடுத்து நிறுத்த வழிசெய்தது நீங்கள் அறிந்ததே!