20MB அளவுள்ள கோப்புகளை இணைப்பிகளாக அனுப்பலாம் மே 25, 2007
Posted by pctimes in இணையம், செய்தி.trackback
கூகிள் நிறுவனத்தின் இலவச இணைய அடிப்படையான இலவச மின்னஞ்சல் சேவையான ஜமெயில் சேவையானது, அதன் பயனர்கள் மின்னஞ்சல் மூலம் இணைப்பிகளாக (Attachments) அனுப்பும் கோப்புகளின் அளவை இரட்டிப்பாக்கி உள்ளது.
ஏற்கனவே இச்சேவை மூலம் பத்து மெகா பைட்ஸ் அளவான கோப்புகளையே அனுப்ப முடியுமாயிருந்தது. ஆனால், இப்போது Gmail பயன்படுத்துபவர்கள் இருபது மெகா பைட்ஸ் கோப்புகளையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய நிலையை கூகிள் நிறுவனம் சாத்தியமாக்கியுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் மூலம் பல புதிய சேவைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் அதேவேளை, அதன் சேவைகள் புதிய முன்னேற்றங்கள், பண்புக்கூறுகள் என்பனவும் தொடர்ச்சியாக அதன் சேவைகளுக்கு சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இணையத்தை ஆளப்போவதென்னவோ, கூகிள் என்பது மட்டும் உறுதியோ!?
தமிழ் PC Times இன் இம் முயற்சி பாராட்டத்தக்கது, முயற்சி தொடர வாழ்த்துக்கள்.