jump to navigation

தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் தரும் சேவை நவம்பர் 2, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
add a comment

கூகிள் நிறுவனமானது, Indic Transliteration எனும் சேவையை ஆரம்பிரத்துள்ளது. இதன் படி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்ணடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலுள்ள சொற்களை இலகுவாக Unicode முறையில் Type செய்து கொள்ள முடியும்.

தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் Type செய்ய, அது Unicode தமிழ் சொல்லாக திரையில் தோன்றுகிறது. உதாரணமாக, neengal என Type செய்து Space bar ஐ அழுத்த “நீங்கள்” என்ற தமிழ்ச் சொல் திரையில் தோன்றும். இதன் மூலம் வேகமாக சொற்களை தட்டச்சு செய்ய முடியும்.

நாம் தட்டச்சு செய்த சொற்களில் கிளிக் செய்தால், அதனையொத்த சொற்பட்டியலையே கூகிள் சேவை நிரற்படுத்திக் காட்டுகிறது. அது மட்டுமில்லாது, Ctrl+g ஆகிய key களை அழுத்துவதன் மூலம் தமிழ் இடைமுகத்திலிருந்து ஆங்கில அடைமுகத்திற்கு வேகமாக மாறவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

Unicode தமிழில் வேகமாக தட்டச்சு செய்வதற்காக கூகிள் தரும் சேவையின் இணைய முகவரி இதுதான். சென்று தான் பாருங்களேன்.

இந்த கூகிளின் முயற்சி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

பென்டகன் தாக்குதலுக்கு சீனா மறுப்பு செப்ரெம்பர் 5, 2007

Posted by pctimes in செய்தி.
add a comment

பென்டகன் கணினித் தொகுதிக்கு சீனாவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுவதை தாம் முற்றிலும் மறுப்பதாக சீனாவின் வெளியுறவு அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றானது, அமெரிக்காவின் பனிப்போர் சம்மந்தமான ஆர்வத்தையே வெளிக்காட்டுவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமது பாதுகாப்பு வலையமைப்பின் கணினிகளை சீனாவின் காவல் துறையினரின் கணினித் தொகுதிப் பிரிவினர் துருவி தாக்குதல் நடத்த முயன்றதாக அமெரிக்கா அண்மையில் செய்திச் சேவையொன்றுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தாக்குதல் காரணமாக பென்டகனின் கணினித் தொகுதிகள் ஒரு கிழமை வரை செயற்படுத்தப்படாமல் கிடந்ததாக அந்தச் செய்திச் சேவையூடாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்ததும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

இப்படியுமா ஆர்வங் கொள்வது? ஓகஸ்ட் 1, 2007

Posted by pctimes in இணையம், சாதனம், செய்தி.
1 comment so far

கடந்த ஜுன் 29ஆம் திகதி வெளியான iPhone ஐ பெற்றுக் கொள்வதில் அமெரிக்க மக்கள் காட்டிய ஆர்வம் வியப்பிற்குரியது. ஆர்வத்தின் காரணமாக மக்கள் வரிசை வரிசையாக குறித்த தினத்திற்கு முன்பிருந்தே iPhone இன் வருகைக்காக தவமாய் தவமிருந்ததை அவதானிக்க முடிந்தது.

iPhone ஐ பெற மக்கள் காட்டிய ஆர்வம் எப்படியானதென கீழேயுள்ள நிழற்படங்களைக் கண்டு புரிந்து கொள்ளலாம். இப்படியுமா ஆர்வங் கொள்வது??

இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா….

iphone.jpg


iphone-6.jpg


iphone-8.jpg


iphone-12.jpg


iphone-13.jpg


iphone-16.jpg


iphone-17.jpg


இத்துணை ஆர்வமா?

Vista வேண்டாம் என்கிறது Acer நிறுவனம் ஜூலை 26, 2007

Posted by pctimes in இணையம், செய்தி, வன்பொருள்.
5 comments

தாய்வானைத் தலைமையாகக் கொண்ட Acer கணினி உற்பத்தி நிறுவனமானது, Windows Vista ஆனது, “மொத்த தொழிற்துறையையே” அதிருப்தியடைய வைத்துள்ளதாக தெரிவித்து, தமது பாவனையிலிருந்து Windows Vista ஐ விலக்கிவிட்டிருக்கிறது.

ஒரு புதிய பணிசெயல் முறைமையானது, கணினி விற்பனையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது இதுவே முதல் தடவையாகும். ஆனாலும், இந்த நிலைமை இந்த வருடத்தின் இறுதி அரையாண்டில் வீழ்ச்சியடையுமென தாம் பலமாக நம்புவதாக உலகின் நான்காவது மிகப் பெரிய கணினி உற்பத்தி நிறுவனமான Acer இன் தலைவர் Gianfranco Lanci தெரிவிக்கிறார்.

கடந்த திங்கள் Financial Times Deutschland எனும் இணையத் தளசெய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

“Vista ஐ நிறுவுவதற்காக வேண்டி, யாராவது புதிய கணினிகளை வாங்கியிருப்பார்கள் என நான் நம்பமாட்டேன்” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

“நிலைப்பு தொடர்பில் நிறைய பிரச்சனைகள் உண்டு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூகிளிற்கு எதிராக வழக்கு ஜூலை 13, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
2 comments

அவுஸ்ரேலியாவின் நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆணைக்குழு, கூகிள் நிறுவனம் தமது தேடற்பொறியில் வழங்கும் தேடல் முடிவுகளை சரியான முறையில் வகைப்பிரித்துக் காட்டாமல் பயனர்களை தேவையில்லாத கஷ்டத்தில் ஆழ்த்துவதாகக் கூறி கூகிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு இணையப்பயனர்களை பொருத்தமற்ற வகையில் வழிகாட்டுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள உலகின் முதலாவது வழக்கு இதுவாகும்.

கூகிள் தேடற்பொறியில் தேடல் மேற்கொள்கையில் பெறப்படும் தேடல் பெறுபேறுகளில், அனுசரனையாளர்களின் இணைப்பும், “சாதாரண” இணையத்தளங்களின் இணைப்பும் காணப்படும். இந்த இரண்டு நிலை இணைப்புகளையும், கூகிள் நிறுவனம் சரியான முறையில் வேறுபடுத்திக் காட்டவில்லை என குறிப்பிடும் அவுஸ்ரேலிய நுகர்வோர் ஆணைக்குழு தெரிவிக்கும் அதேவேளை இதனைத் தடுக்கும் பொருட்டே, தாம் வழக்குத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றது.

இந்த வழக்கின் எதிராளிகளாக கூகிள், கூகிள் அயர்லாந்து மற்றும் கூகிள் அவுஸ்ரேலியா ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த வழக்குத் தொடர்பில் நாம் கடுமையாக எமது பக்க விடயங்களை சொல்லி இதில் வெற்றி பெறுவோம். இந்தக் குற்றச்சாட்டு யாவும் அடிப்படையற்றது” என கூகிள் அவுஸ்ரேலியாவின் பேச்சாளர் Rob Shilkin கருத்துத் தெரிவிக்கிறார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

YouTube இற்கு LG கையடக்கத் தொலைபேசி தயாரிக்கிறது ஜூலை 3, 2007

Posted by pctimes in சாதனம், செய்தி.
3 comments

உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வுத் தளமான YouTube இற்காக கையடக்கத் தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் ஒப்பந்தமொன்றில் தென் கொரியாவின் நிறுவனமான LG Electronics அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்படும் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியே வீடியோ கோப்புகளை மேலேற்றவும் (Upload), பார்வையிடவும், பகிர்ந்து கொள்ளவும் பயனர்களுக்கு சாத்தியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக LG நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரு கணினி செய்யும் வேலைகளை இக்கையடக்கத் தொலைபேசி செய்யப்போகிறது என்பதுதான் சுருக்கமான தகவலாகும்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் பயனர்கள் YouTube இணையத்தளத்திற்கு வருகை தருவதோடு இதுவரையில் பயனர்களால் சுமார் 70,000 இற்கும் அதிகமான வீடியோ கோப்புகள் இத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனமான LGஆனது, YouTube இன் சொந்தக்காரர்களான Google உடனும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது கவனிப்பட வேண்டிய விடயம்.

Google சேவைகளை நேரடியாக இணைப்பில் ஏற்படுத்தக்கூடிய மூன்றாம் தலைமுறைக்குச் சொந்தமான “Google phone” எனப்படும் கையடக்கத் தொலைபேசியை கடந்த மாதம் ஐரோப்பாவில் LG நிறுவனம் விற்பனைக்கு விட்டது. இந்தக் கையடக்கத் தொலைபேசி மூலம் Google Search, Gmail மற்றும் Google map போன்ற சேவைகளுக்கு இலகுவில் இணைப்பை ஏற்படுத்த முடியுமென சொல்லப்படுகிறது.

1.65 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடந்த வருடம் YouTube இனை Google வாங்கியது நீங்கள் அறிந்ததே!!

ஐந்து சொற்களில் மட்டும் பேச வேண்டும் ஜூன் 12, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
2 comments

அண்மையில் Webby Awards 2007 நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. ஜுன் 5 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக இம்மாத தமி்ழ் PC TIMES இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். நிகழ்வின் சுவாரஸ்யங்கள் பற்றியும் இதோ எமது வலைப்பதிவின் ஊடாக பகிர்ந்து கொள்கிறோம்.

விருது வழங்கல் விழாவில் விருது பெற்றவர்கள் தாங்கள் விருது பெற்றுக் கொண்டதை தெரிவிக்கும் ஏற்றுக் கொண்ட பேச்சு ஐந்து சொற்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென Webby விருப்பம் தெரிவித்திருந்தது.

இதன்படி, வெற்றியாளர்கள் தங்கள் உரையை ஐந்து சொற்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தனர். மிகவும் சுவாரசியமான சொற்களைக் கொண்ட பேச்சுகள் மேடையில் அரங்கேறின.

வெற்றி பெற்ற Ebay ஆனது, தனது பேச்சில் “ஏல விற்பனை 99 சதத்தில் ஆரம்பமாகும்” (“Bidding starts at 99 cents.”) என குறிப்பிட்டது.

அதேபோல், உலகளவில் பிரசித்தம் வாய்ந்த வீடியோ கோப்பு பகிர்வுத்தளத்தின் சார்பில் விருதைப் பெற்றுக் கொண்ட You Tube இன் ஸ்தாபகர்கள், “You Tube, இரசிகர்களே இது உங்களுக்கானது” (“You Tubers, this is for you.”) என தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.

உலகளவில் 60 மேற்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 8000 இற்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்தே விருது வழங்கலுக்கு பொருத்தமான வெற்றியாளர்களன் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ உங்கள் பார்வைக்காக, Webby Awards 2007 நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை எமது வலைப்பதிவூடாக பகிர்ந்து கொள்கிறோம்.




இரண்டு பில்லியனைத் தாண்டும் ஜூன் 12, 2007

Posted by pctimes in செய்தி, வன்பொருள்.
add a comment

2008 ஆம் ஆண்டளவில் உலகளவில் பாவிக்கப்படும் தனிப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையானது, ஒரு பில்லியனாக அதிகரிக்குமெனவும், இது 2015 ஆம் ஆண்டில் மிக வேகமாக 2 பில்லியனை அடைந்து விடுமெனவும் வர்த்தக ஆய்வறிக்கையொன்று எதிர்வு கூறுகின்றது.

Forrester Research எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து, 2003 தொடக்கம் 2015 வரை உலகளவில் பாவனைக்கு விடப்படும் கணினிகளின் எண்ணிக்கை 12 சதவீதத்தினால் சராசரியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பில்லியன் கணினிகள் என்ற இலக்கை அடைய 27 ஆண்டுகள் சென்றாலும், அடுத்த பில்லியனை அடைய வெறும் ஐந்து ஆண்டுகளே எடுக்குமென இவ்வறிக்கை சுட்டி நிற்கின்றது. உலகளவில் புதுப்பிக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், குறைந்த விலையில் கணினிகள் விற்பனையாதல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வுள்ள மக்களால் ஏற்படுத்தப்படும் கேள்வி என்பனவற்றால், இந்நிலை சாத்தியமாகுமென தெரிவிக்கப்படுகிறது.

பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 2015 ஆம் ஆண்டில் மொத்தக் கணினித் தொகையில் 775 மில்லியன்கள் காணப்படுமெனவும் அவ்வாய்வறிக்கை சுட்டி நிற்கிறது.

கணினிகளிற்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.

நிழற்பட உணரிகள் பெரியளவில் உற்பத்தி ஜூன் 6, 2007

Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.
1 comment so far

டிஜிடல் கெமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவைகளில் பொருத்தப்படும் நிழற்பட உணரிகளை (image sensors) உற்பத்தி செய்வதற்காக 500 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக Sony நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த முதலீடானது, இவ்வருடம் முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் வரை உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது என Sony நிறுவனம் தெரிவிக்கிறது.

Sony நிறுவனமே நிழற்பட உணரிகளின் உற்பத்தியில் ஜாம்பவானத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

iPhone வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது ஜூன் 4, 2007

Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.
add a comment

Apple நிறுவனத்தின் மிகப் புரட்சிகரமான உற்பத்தியாகிய iPhone ஐப் பற்றி நீங்கள் அறிவீர்கள் (தமிழ் PC TIMES, 2007 பெப்ரவரி மாத இதழ்). இந்த iPhone ஆனது இம்மாதம் வெளியிடப்படடுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது என்ன திகதி என அறிவிக்கப்படவில்லை.

iphonejobs.jpgபலரும் எதிர்பார்க்கும் இந்த iPhone அமெரிக்காவில் வெளியாகும் தினத்தை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 29 ஆம் திகதி இந்தப் புரட்சிகர iPhone வெளியாகுமென நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியாகவுள்ள iPhone ஆனது, 499 மற்றும் 599 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியில் அனைவரையும் கவர்ந்த பண்பாக “தொடுகை உணர்ச்சி” இடைமுகம் (touch-sensitive interface) காணப்படுகிறது.

இந்தச் சாதனத்தின் மூலம் இணைய இணைப்பின் விளைவை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்படுகின்றது.

ஐரோப்பியாவிலும், உலகம் பூராகவும் இந்த iPhone வெளியாகும் தினம் இதுவரையில் அறிவிக்கப்படவி்ல்லை.